Episodios

  • Stalin வாரிசு Vs EPS வாரிசு வார், டெல்லிக்கு ஷாக் தந்த சுப்ரீம் கோர்ட்? | Elangovan Explains
    May 22 2025

    துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தமாக இடைக்கால தடை உத்தரவு போட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதை வைத்து திமுகவுக்கு செக் என கொண்டாடத் தொடங்கியது பாஜக மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி டீம் ஆனால் அமலாக்கத்துறையின் டாஸ்மாக் சோதனைக்கு, இடைக்கால தடை உத்தரவு போட்டு, 5 குட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பிஜேபிக்கு சுப்ரீம் கோர்ட் தந்த ஷாக் என திமுக கொண்டாடத் தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விடும் உதயநிதி. அப்செட் எடப்பாடி. காரணம் உதயநிதியை அதிமுக டார்கெட் செய்ய, பதிலடியாக எடப்பாடி வாரிசு மிதுனை அட்டாக் செய்ய தொடங்கியுள்ளார் ரகுபதி.

    புது புது ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது.

    Más Menos
    18 m
  • E.V Velu-வுக்கு, Ponmudi வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains
    May 21 2025

    'வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...' என சீண்டிய எடப்பாடி.

    ' இது உரிமை கொடி' என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார். இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின். முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர். மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் ரூட் எடுத்தும் பலரும் முயற்சி செய்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார் கே.என் நேரு?

    இன்னொரு பக்கம்,

    எம்.ஆர்.கே பன்னீர் உள்ளே... எ.வ வேலு வெளியே... இதனால் உச்சகட்ட ஹேப்பியில் பொன்முடி. அவருடைய அதிகாரத்தை வேலு பறித்து விடுவாரோ என அஞ்சி இருந்த நேரத்தில், இந்த ட்விஸ்ட் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    என்ன நடக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில்? திமுகவுக்குள. அனல் வீசும் பஞ்சாயத்துகள். என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?

    Más Menos
    22 m
  • Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elangovan Explains
    May 20 2025

    சமீபத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் சசிகலா. இன்னொரு பக்கம், கொடநாட்டில் 'ஜெயலலிதா மணிமண்டபம்' கட்ட வேண்டும் என்பதை கையில் எடுத்துள்ளார். இதற்கடுத்து தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளை சந்தித்து பேச உள்ளார். தீவிர சுற்று பயணம் மேற்கொள்ளவும் பிளான்கள் வகுத்துள்ளார். இந்த நகர்வுகளுக்கு பின்னால், எடப்பாடியை வழிக்குக் கொண்டு வரும் திட்டம் உள்ளது என்கிறார்கள். இதற்கு சூத்திரம் வகுத்துக் கொடுத்தது டெல்லி தான். மீடியேட்டராக ஒரு பத்திரிக்கையாளர் உதவுகிறார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் 'அன்பில் மகேஷ் மற்றும் விஜயை' டார்கெட் செய்யும் தமிழிசை. பின்னணியில் இருக்கும் ஐந்து அரசியல் கணக்குகள். அடுத்து, விஜய் வைத்திருக்கும் மூன்று மாத வொர்க் பிளான். உட்கட்சிக்குள் எழுந்திருக்கும் சில சிக்கல்களை சரி செய்யுமா விஜய்யின் வியூகம்?

    Más Menos
    19 m
  • Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangovan Explains
    May 19 2025

    அதிமுக,பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உட் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின். 'மிஷன் 200' என்கிற டார்கெட்டை நோக்கி ஒவ்வொரு மாவட்டங்களாக செல்ல, அங்கே ஆயிரமாயிரம் சிக்கல்கள். 'இப்படி ஒரு மாவட்டத்தை நான் பார்த்ததே இல்லை' என கொதிக்கும் கே.என் நேரு. நயினாருடன் நெருக்கமான நட்பில் நெல்லை திமுக. 'மன்னிப்பை நானே கேட்கிறேன்' எனும் ஆ.ராசா.இப்போதே தொகுதியை எதிர்பார்க்கும் பட்டுக்கோட்டை ரேஸ் என பரபரப்பு பஞ்சாயத்துகள். இதை சமாளிக்க ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் புது டாஸ்க்.

    Más Menos
    20 m
  • Vijay-க்கு தூண்டிலிடும் OPS, உடையும் அபாயத்தில் PMK? | Elangovan Explains
    May 17 2025

    'ராமதாஸ் - அன்புமணி' இடையிலான மோதலில், சமரச முயற்சியில் இறங்கி இருக்கும் ஜி கே மணி. இதில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனக்கே ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை காட்டி, அன்புமணியை ஓரம் கட்ட திட்டமிட்டு இருந்தார் ராமதாஸ். இதை புரிந்து கொண்டு, ராமதாஸை ஓரங்கட்ட, தனக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை அன்புமணி உணர்த்தும் விதமாக ஆப்சன்ட் ஆகியுள்ளார். இரண்டு பேரும் விடாப்பிடியாக இருக்க, 'இரட்டை பாமக' உருவாகி விடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் தொண்டர்கள். இன்னொரு பக்கம், விஜய்யுடன் கூட்டணி சேர, டீல் பேசும் ஓபிஎஸ் டீம். புது டிவிஸ்ட்.

    Más Menos
    18 m
  • Ramadoss - Sowmiya Anbumani War, EPS-க்கு வலைவிரிக்கும் Vijay? | Elangovan Explains
    May 16 2025

    பாமகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை, தைலாபுரத்தில் கூட்டினார் ராமதாஸ் ஆனால் 108 பேரில் வெறும் பதினோரு பேர் மட்டுமே ப்ரெசென்ட். அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் ஆப்சென்ட். பின்னணியில் 'ராமதாஸ் - சௌமியா அன்புமணி' இடையிலான குடும்ப மோதலும், அன்புமணி க்கு மாநாட்டில் ராமதாஸ் பாடம் எடுத்ததும் காரணம் என்கிறார்கள். இதற்கிடையே ஜூலை 25ஆம் தேதி வரை கெடு வைத்துள்ளார் ராமதாஸ்.

    இன்னொரு பக்கம், இதே போல மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வேகம் எடுத்துள்ளார் விஜய். கூட்டணி சம்பந்தமாக அவர் முன்பு நான்கு ஆப்சன்கள் இருக்க, எதை டிக்கடிக்க போகிறார் விஜய்? யாருடன் கூட்டணி சேர உள்ளது த.வெ.க?

    Más Menos
    21 m
  • நயினாரை நம்பும் Edapadi, சவுத்தில் கோட்டைவிடும் ADMK! Statistics ஷாக்! | Elangovan Explains
    May 15 2025

    அதிமுகவுக்கு வீக்காக உள்ளது தென்தமிழ்நாடு. இதை சரிகட்ட, தென் மாவட்டங்களை பாஜகவுக்கு ஒதுக்கி, வெற்றி பெற்றுவிடலாம். மேற்கு மண்டலத்தை அதிமுக மூலம் வெல்லலாம் என்பது கணக்கு ஆனால் ஒட்டுமொத்தமாக தென்னகத்தை, பாஜக பக்கம் தள்ளிவிடுவது, அதிமுக எதிர்காலத்திற்கு ஆபத்து மேலும் அதிமுக கூட்டணியால் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறது பாஜக. அதே நேரம் பாஜக கூட்டணியால், அதிமுகவுக்கு நன்மைகள் குறைவு. பாஜக வளர நாம் மேடை அமைத்து தருவதா? என குமுகின்றனர் தென் தமிழ்நாடு அதிமுக சீனியர்கள். என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

    Más Menos
    17 m
  • Candidate list ரெடி பண்ணும் K.N Nehru, E.V Velu டீம்? DMK-வுக்கு, Ramadoss தூது? | Elangovan Explains
    May 14 2025

    பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேருக்கு, 'சாகும் வரை சிறை' என்ற தீர்ப்பை கொடுத்து உள்ளது கோவை மகளிர் நீதிமன்றம்.

    இதை வைத்து, 'இந்த வெற்றி எங்களால்தான் வந்தது' என மு.க ஸ்டாலின் Vs எடப்பாடி இடையே பெரும் போர். எடப்பாடிக்கு எதிராக அடுத்த கட்டமாக, கொடநாடு அஸ்திரத்தை ஏவும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், 234 தொகுதிகளுக்கும் 7 மண்டல பொறுப்பாளர்களை நியமத்துள்ளார் ஸ்டாலின். வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி பசை பார்சல் வரை வேலைகளை தொடங்கிவிட்ட ஏழு பேர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹிடன் அஜெண்டா-க்கள் என்ன? அடுத்து, பாஜகவுக்கு பயம் காட்டத் துடிக்கும் ராமதாஸ். பின்னணியில் மகனுடனான மல்லுக்கட்டும், ராஜ்யசபா சீட் கணக்கும் உள்ளது. இப்போதைக்கு ஓயாது 'அப்பா - மகன்' இடையிலான வார்.

    Más Menos
    20 m
adbl_web_global_use_to_activate_T1_webcro805_stickypopup