
சுதா ஶ்ரீநிவாசன்- உயிரில் கலந்து - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
No se pudo agregar al carrito
Add to Cart failed.
Error al Agregar a Lista de Deseos.
Error al eliminar de la lista de deseos.
Error al añadir a tu biblioteca
Error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
-
Narrado por:
-
De:
Acerca de esta escucha
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'உயிரில் கலந்து'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சுதா ஶ்ரீநிவாசன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் சுதா ஶ்ரீநிவாசன் காப்பீட்டுத்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டவர். சமீபத்தில்தான் எழுதத் தொடங்கினார். சிறுவயது முதலே படிக்கும் பழக்கம் உண்டு. அம்புலிமாமா முதலாக கல்கி, சுஜாதா, வாஸந்தி, பாலகுமாரன் என நீளும் வரிசையில் தீவிர இலக்கிய வாசிப்பை வந்தடைந்தார். ‘எழுதுக’ என்னும் ஜெயமோகனின் சொல்லை கட்டளையாக எடுத்துக்கொண்டவர்களில் தானும் ஒருத்தி என்கிறார்.“உயிரில் கலந்து” என்ற சிறுகதை, குடும்பத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் பற்றிப் பேசுகிறது. திருமணம் நன்கு அமையவில்லையெனில் அதன் தாக்கம் எப்படி உணர்வுபூர்வமாக அவர்களைக் காயப்படுத்துகிறது என எடுத்துச் சொல்கிறீர்கள். ஆன்மீகத்தில் நாட்டமும் , உதவி செய்யும் மனப்பான்மையும் உடையவளாயினும் இந்த மனவேதனைகள் இவற்றையெல்லாம் மீறி அவள் உயிரை அவளே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவளைக் கொண்டு போகிறது. பெண்கள் மனதுதான் எவ்வளவு மென்மையானது. சில சமயம் கோழையாகவும் செயல்படுகிறார்களா?உங்கள் கதையின் மொழி நல்ல நேர்த்திஇது ஒரு பெண்ணின் தனிப்பட்ட கதையாக இருந்தாலும், அது பல பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. பிரேமா உயிரை மாய்த்துக்கொள்கிறாள். உயிர் போகுமுன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போகும்போது “ இதுதான் அவனுக்கான தண்டனை என்பாள். ஆனால் நிஜத்தில் தண்டனை ஏது? அவள் இறந்த பின் அவன் மீண்டும் மாப்ப்பிளை ஆகி தகப்பன் ஆகிறான். ஆனால் 25 வருடங்களாக அவள் நெருங்கிய உறவினருக்கு முக்கியமாக தங்கை ப்ரியாவிற்கு மனவேதனை ஆரம்பமாகிறது. காரணம் தேடுகிறாள். தற்கொலை செய்துகொண்டவர்கள் சென்றுவிடுகிறார்கள் அதன் பின் அந்த குடும்பம் மனதளவில் படும்பாட்டை நீங்கள் வெளிபடுத்தியுள்ளது அருமை. தங்கை ப்ரியாவிற்கு அவள் கணவன் மாதவன் மிகுந்த ஆறுதலாக இருப்பதில் தங்கை ப்ரியா கொடுத்து வைத்தவள். மொத்தத்தில், “உயிரில் கலந்து” என்பது ஒரு உளவியல் ரீதியான, ஒரு உணர்வுபூர்வமான சிறுகதைகதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/உயிரில்-கலந்து/